கீழே வீடியோ உள்ளது இதனை முடியும் வரை பாருங்கள், நிஜம் புரியும்:
பித்துப் பிடித்த சீமான், மாற்றி மாற்றி உளறி… தமிழகத்தை குழப்பியது போதாது என்று. தற்போது ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் பிழவை ஏற்படுத்தி உள்ளார். பெரியாரைப் பார்த்து வளர்ந்த போராளிகள் நாங்கள் என்று, தலைவர் பிரபாகரனே தன்னிடம் கூறினார் என்று, மேடைகளில் 2009ல் ,2011ல், மற்றும் 2018ல் கூட சீமான் பேசி இருக்கிறார்.
ஆனால் நேற்றைய தினம்(10) மதுரை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் கேட்டபோது, நான் ஈழம் சென்றவேளை அங்கே MGR படம் இருந்தது, சுபாஷ் சந்திர போஸ் படம் இருந்தது, ஆனால் பெரியாரின் படம் இல்லை. தலைவர் பிரபாகரன் பெரியாரைப் பற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை என்று அப்படியே பிளேட்டை திருப்பிப் போட்டுள்ளார்.
இது போக இப்படி மாற்றி மாற்றி பேசி வருவதால், நாம் தமிழர் கட்சியில் உள்ள, பல முக்கியஸ்தர்கள் வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திலும் பிற கட்சிகளிலும் இணைந்து வருகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த சீமான், எனது கட்சியில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம் என்று வசைபாடியுள்ளார்.
தற்போது திருச்சி விமான நிலையத்தில் சீமான் கொடுத்த பேட்டை வைரலாக பரவி வருகிறது. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சி நோட்டா என்று 3 கட்சிகளே போட்டியிட்டது. இதனால் சீமானுக்கு அரிய வாய்ப்பு இருந்தது. அதிமுக , மற்றும் இதரக் கட்சி வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சிக்கே வாக்குப் போட்டு இருப்பார்கள். ஆனால் அந்த அருமையான சந்தர்பத்தை சீமான், தனது பெரியார் எதிர்ப்பால் இழந்து விட்டார்.