பள்ளி செல்ல மறுத்து அழுத மாணவி – ஆசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

இந்த செய்தியை பகிருங்கள்

இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சொல்லி பள்ளி திறந்த இரண்டாவது நாளிலேயே அழுதிருக்கிறார் அந்த ஐந்தாம் வகுப்பு மாணவி. படிப்பில் நாட்டம் இல்லை என்கிற ரீதியில் அந்த மாணவியின் பெற்றோரை அதட்டிக் கேட்கவும், ஆசிரியரின் பாலியல் தொல்லைகள் சொல்லி அழுதிருக்கிறார் . மாணவர்களுக்கும் இதே போல அவர் தொந்தரவு கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த ஆசிரியரை அடித்து உதைத்ததில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் சித்தன் பட்டி கிராமம். இக் கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். கோடை விடுமுறை முடிந்து கடந்த 20ஆம் தேதி தான் பள்ளி திறக்கப்பட்டு இருக்கிறது. 22 ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, ‘’இனிமேல் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்’’ என்று சொல்லி அழுதிருக்கிறார் .

மகளுக்கு படிப்பில் நாட்டமில்லை என்று நினைத்த பெற்றோர், ஏன் இனிமேல் போக முடியாது என்று அதட்டி கேட்டிருக்கிறார்கள். உடனே அந்த சிறுமி, ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவின் பாலியல் தொந்தரவினை சொல்லி அழுதிருக்கிறார்.

தனக்கு மட்டுமல்லாமல் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களையும் கை, கால்களை அமுக்கச் சொல்லி அவர்களிடமும் அத்துமீறுகிறார் ஆசிரியர் என்று சொல்லியிருக்கிறார்.

அகஸ்டின் தங்கையாவை பார்க்க வந்த உறவுக்கார சிறுமியிடமும் தவறான முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார் அந்த மாணவி. மேற்படி யாரிடமும் வெளியே செல்லக் கூடாது என்றும் அந்த மாணவியிடம் மிட்டியிருக்கிறார் ஆசிரியர் . மற்ற மாணவர்களிடமும் இதேபோல் மிரட்டி வந்திருக்கிறார்.

மாணவி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊர் மக்களிடம் சொல்லி அவர்களையும் திரட்டிக் கொண்டு போய் பள்ளி ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவை விசாரித்து அடித்து துவைத்திருக்கிறார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us