கல்லூரி விடுதியில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி

இந்த செய்தியை பகிருங்கள்

என்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கில் சடலமாக தொங்கியது சக மாணவிகளுக்கும் கல்லூரியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவியின் உறவினர்களும் பெற்றோரும் கல்லூரிக்கு வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் புவனகிரி வடக்கு திசையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரவீனா. 18 வயதான பிரவீனா கடலூர் அடுத்த எஸ் .குமாரபுரம் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்து படித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலையில் கல்லூரி விடுதியில் மாணவி பிரவீனா தூக்கில் சடலமாக தொங்கியிருக்கிறார். இதைப்பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனே பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைக்கேட்டதும் கதறித் துடித்த பெற்றோர்களும் உறவினர்களும் கல்லூரிக்கு ஓடிவந்துள்ளனர். மாணவியை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவி பிரவீனா தற்கொலை தொடர்பாக அங்குள்ள மாணவிகளிடமும் கல்லூரி நிர்வாகத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us