உத்தமபாளையத்தில் பிளஸ் 1 மாணவர் கொலை… 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!

இந்த செய்தியை பகிருங்கள்

உத்தமபாளையத்தில் 11ஆம் வகுப்பு மாணவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகன் மாதவன்(16). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாதவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி கல்லறைத்தோட்டம் பின்புற பகுதியில் உள்ள கிணற்றில் மாதவன் சடலமாக மிதந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் உத்தமபாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதானைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் மாதவனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாதவனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. மேலும், போலீசாரின் விசாரணையில், மது அருந்தும் பழக்கமுள்ள மாதவன், சம்பவத்தன்று மதுரை செல்லூரை சேர்ந்த அல்லாபிச்சை(23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றின் அருகே மது அருந்தி உள்ளனர். அப்போது, மாதவனுக்கு அவர்கள் தர வேண்டிய ரூ.1000-ஐ கேட்டுள்ளார்.

இதனால் மாதவனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த அல்லாபிச்சை மற்றும் 2 சிறுவர்கள், அவரை கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் கைதுசெய்த போலீசார், அல்லாபிச்சையை தேனி சிறையிலும், 2 சிறுவர்களை மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us