உச்ச கட்ட கவர்ச்சி..! – கோடிகளில் சம்பளம்..! – சாய் பல்லவி அதிரடி.! – ரசிகர்கள் ஷாக்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகர் நிவின் பாலி நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மலையாளம் சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது வெறும் மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 65 கோடி வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது.

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகின்றார். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்ளும் இவர் சமீபத்தில் காஷ்மீரில் பண்டிட்கள் விவகாரத்தில் தன்னுடைய கருத்தை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கண்டிப்பாக பார்த்துவிடுகிறார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் சாய் பல்லவி ஒரு முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், கவர்ச்சியாக நடித்தால் சம்பளத்தை இரட்டிப்பாக தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், சாய்பல்லவி ஒரு இருபது வருடங்கள் கழித்து என்னுடைய குடும்பம் குழந்தைகள் என நான் நடித்த படங்களை பார்க்கும் பொழுது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.எனவே நிச்சயமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதை கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் கண்டிப்பாக நான் நடிக்கின்றேன்.

படத்திற்கு சம்பந்தமே இல்லாத கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க நான் சம்மதிக்க மாட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். கோடிகளில் சம்பளம் கொடுக்க முன்வந்தும் கவர்ச்சியாக நடிக்க மறுத்து விட்டார் நடிகை சாய் பல்லவி.

இதனால் கடுப்பான அந்த இயக்குனர் திரிஷா இல்லனா திவ்யா என்பதுபோல சாய்பல்லவி இல்லன்னா என்ன வேற ஒரு நடிகையை என்று வண்டியை திருப்பி கொண்டு சென்று விட்டாராம்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us