யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது.
அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அத்திணைக்களத் தலைவர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவரை எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.