பெண் போலீசின் நிர்வாண புகைப்படங்கள் – ரயில்வே ஊழியரின் அடாவடி

இந்த செய்தியை பகிருங்கள்

 

நிர்வாண புகைப்படங்களை காட்டி ரயில்வே ஊழியர் மிரட்டியதால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் ஆயுதப்படையில் பெண் போலீசாக இருந்து வரும் அந்த முப்பது வயது இளம்பெண்ணின் கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி இருக்கிறார் . இதன் பின்னர் அந்தப் பெண்ணுடன் உறவினர் ஒருவர் பழகி வந்திருக்கிறார். 40 வயதான அந்த வாலிபர் ஸ்டாலின் திருவெறும்பூரில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

ஸ்டாலினும் அந்த இளம் பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார் ஸ்டாலின். அன்று நடந்த விஷயத்தை சொல்லி சொல்லியே பலமுறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் அவர். உல்லாசமாக இருந்தபோது புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு அதை காட்டி காட்டி மிரட்டியும் தொடர்ந்து என்ற பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் தேதியன்று பெண் போலீசிடம் அவரின் நிர்வாண படங்களை காட்டி இருக்கிறார் . இப்போது என்ன சொல்லி மிரட்ட போகிறானோ என்று அந்தப் பெண் போலீஸ் அதிர்ந்து இருந்த வேளையில், 20 ஆயிரம் உடனே பணம் வேண்டும் . இல்லை என்றால் இந்த ஆபாச படங்களை உறவினர்களுக்கு எல்லாம் வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் போலீஸ், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இருக்கிறார். அவர் மயங்கி கிடந்ததை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . பின்னர் தற்கொலை முயற்சி குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரித்ததில் ரயில்வே ஊழியர் ஸ்டாலின் மிரட்டல் விவரங்களை சொல்லியிருக்கிறார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், பெண்ணை மானபங்கம் படுத்துதல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர் போலீசார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us