கோட்டா உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்-! 

இந்த செய்தியை பகிருங்கள்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோன்று ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

எந்தவொரு இடைக்கால ஏற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இதனை ஓர் நிபந்தனையாக முன்வைத்தமை சரியான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us