உன்னால என்னை டைவர்ஸ் செஞ்சுட்டார் என் கணவர்.. நீயும் இப்ப கழற்றி விட பார்க்குறியே… காதலன் வீட்டு முன் கதறிய பெண்

இந்த செய்தியை பகிருங்கள்

 

நகைக்கடை அதிபரை திருமணம் செய்த அந்தப்பெண்ணுக்கு அவர் கடையில் வேலை பார்த்த வாலிபருடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. கணவருக்கு தெரிய வந்ததும் அந்த பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். அந்த வாலிபருடன் 13 ஆண்டுகள் குடும்பம் நடத்திய அந்த பெண் தற்போது அவர் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த 35 வயது வாலிபர் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டு த்தாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வாலிபர் நகைக்கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் நகை கடையில் அவர் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது அந்த நகைக்கடையில் உரிமையாளர் மனைவியுடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இது அந்த நகை கடை உரிமையாளருக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர் தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டார் . அந்த வாலிபரையும் கடையில் இருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விட்டார்.

இதையடுத்து தான் அந்த வாலிபர் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் அந்த வாலிபர் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார். 13 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள். தற்போது அந்த பெண்ணுக்கு 44 வயது ஆகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த வாலிபரின் வீட்டு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசாரிடம், இவருடன் கள்ள உறவு இருந்ததால் தான் என் கணவர் என்னை விவாகரத்து செய்தார். அப்போது 35 இலட்சம் ரூபாய் பணமும் 70 பவுன் நகைகளையும் எனக்கு கொடுத்தார். அந்த நகைகளை எல்லாம் நான் இவரிடம் தான் கொடுத்தேன். 13 வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்தோம் இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். அந்த என்னைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்னிடம் இருந்து வாங்கிய 35 லட்சம் ரூபாய் பணத்தையும் 70 பவுன் நகைகளை என்னிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கதறி அழுதிருக்கிறார்.

போலீசார் அவரை சமாதானம் செய்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள் . அதன் பின்னரே அந்த பெண் நம்பிக்கையுடன் அங்கிருந்து சென்று இருக்கிறார்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us