ஒரே ஒரு பெண் என்று நினைத்து வீட்டிற்குள் சென்ற வாலிபருக்கு அதிர்ச்சி! அங்கே மேலும் மூன்று பெண்கள்

இந்த செய்தியை பகிருங்கள்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற வாலிபர் நேற்று இரவு காஞ்சிபுரம் செல்வதற்காக பேருந்தை எதிர்நோக்கி காத்து இருந்திருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து சமையல் வேலை செய்துவரும் சுரேஷுக்கு திருமணமாகவில்லை.

27 வயதான இந்த வாலிபர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்துக்காக காத்திருந்து இருக்கிறார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் சுரேஷிடம் பேச்சு கொடுத்து, ஆசை வார்த்தை சொல்லி உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார். இதில் சபலப்பட்ட சுரேஷ் அந்த பெண்ணுடன் உல்லாசத்திற்கு வர சம்மதித்திருக்கிறார்.

அந்தப் பெண் தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வாலிபரை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே வீட்டிற்கு சென்ற வாலிபருக்கு ஒரே அதிர்ச்சி. அங்கு ஏற்கனவே மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்கள். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் சுதாரித்துக் கொண்டு வெளியே வருவதற்குள் நான்கு பெண்களும் சேர்ந்து சுரேஷை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். சுரேஷிடம் இருந்த 5000 ரூபாய் பணம், ஏடிஎம் கார்டுகளை அந்தப் பெண்கள் பறித்துக்கொண்டு விரட்டி அனுப்பி வைக்கிறார்கள். அங்கிருந்து பலத்த காயங்களுடன் தப்பித்த சுரேஷ் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறார்.

இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றார்கள். தலைமறைவாக இருக்கும் நான்கு பெண்களையும் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us