கஹதுடுவ வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய்-தந்தை பலி-!

இந்த செய்தியை பகிருங்கள்

கஹதுடுவ, மாகம்மன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரவு வீட்டின் அறையொன்றில் (25) ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் 47 வயதான தந்தை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய தாயாரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் காயமடைந்த 19 வயது சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 4 வயது சிறுமி மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீயினால் வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us