“நேச்சுரல் ப்யூட்டி… செதுக்கி வச்ச தங்க சிலை…” – இணையத்தை கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை..!

இந்த செய்தியை பகிருங்கள்

பிரபல சீரியல் நடிகை சுஜிதா தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் தற்போது நடிகர்களாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அஜித்குமார் மாதவன் மம்முட்டி மோகன்லால் நாகார்ஜுனா பாலையா போன்ற முன்னணி நடிகர்களுடன் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை சுஜிதா தமிழ் தெலுங்கு மலையாளம் என கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் சுஜிதா.

தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகும் இருக்கின்றார். அடிக்கடி இணையத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

சீரியலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் இணையத்திலும் குடும்ப பாங்கினியாகவே தோன்றுகிறார். புடவை சகிதமாக இவர்களிடம் புகைப்படங்களை பார்க்க இவரை இலட்சக்கணக்கான செயல்களும் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நீல நிற பட்டுப்புடவை, பிங்க் நிற ஜாக்கெட் என அழகு தேவதையாக மிளிரும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.தங்க ஜரிகை பார்டர் வைத்த நீல நிற பட்டுப்புடவை இவருடைய அழகிற்கு எடுப்பாக இருக்கின்றது. மேலும் முக்கால்கை அளவிற்கு அணிந்துள்ள ஜாக்கெட் அவருடைய அழகிற்கு மேலும் துணை நிற்கின்றது.

தன்னுடைய உடைக்கு ஏற்ப அழகான தங்க ஹாரம் ஒன்றை அணிந்துள்ள இவர் தலையில் மல்லிகை பூவுடன் முகத்தில் இயற்கையான சிரிப்பை படர விட்டு எடுத்துகொண்டுள்ள இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us