2022ம் ஆண்டு தனது நண்பர்கள் 4 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக, பிரையன் கைது செய்யப்பட்டார். 3 பெண்கள் அடங்கலான ஒரு ஆண் என 4 பேரை அவர் கொலை செய்ததாக அமெரிக்க FBI குற்றம் சாட்டியது. இதில் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில். அது இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்த வழக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால், பிரையன் கொலை செய்ய பாவிக்கப்பட்ட கத்தி, மற்றும் கை உறைகளில் வேறு 2 பேரின் ரத்தக் கறை காணப்படுகிறது. அது யார் என்பது தெரியவில்லை. அது இறந்து போன 4 பேரினதும் கூட இல்லை. அப்படி என்றால் சம்பவ இடத்தில் மேலதிகமாக 2 பேர் இருந்துள்ளார்கள் என்று, தற்போது பிரையனின் வாக்கீல் தெரிவித்துள்ளார். இதனை முன்னரே FBஈ கண்டு பிடித்து இருந்தது என்றும்.
ஆனால் இந்த தகவலை அவர்கள் நீதிமன்றுக்கு சொல்லவில்லை என்று வக்கீல் கூறியுள்ளார். இதனால் பிரையனை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி , பிரையனை நீதிமன்றம் விடுதலை செய்ய உள்ளது. காரணம் இது சோடிக்கப்பட்ட வழக்கு என்று நீதிமன்றம் கருதுகிறது. இந்தியா போல, உண்மையான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால் கிடைச்ச ஏமாளி மீது குற்றத்தை சுமத்தி அவரை உள்ளே போட்டு விடுவது போலவே FBஈ யும் செயல்பட்டுள்ளது.