இலங்கையிலிருந்து வெளியேறுகிறதா Uber Eats? இதுதான் காரணம்

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையிலிருந்து வெளியேறும் எண்ணம் எதுவுமில்லை என Uber Eats தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உணவு விநியோகத்தினை அதன் பணியாளர்களால் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்ற போதிலும் இலங்கையிலிருந்து வெளியேறப்போவதில்லை என Uber Eats தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரிப்பினால் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உணவுக்கொள்வனவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் Uber Eats நிறுவனம் இலங்கையிலிருந்து வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இது குறித்து கேள்வி எழுப்பியவேளை இலங்கையிலிருந்து வெளியேறும் எண்ணமில்லை என Uber Eats தெரிவித்துள்ளதாக மோர்னிங் செய்திவெளியிட்டுள்ளது.

இந்த சவாலன தருணங்களில் எங்கள் சகாக்களுடன் தோளோடுதோள் நிற்க விரும்புகின்றோம்இஎங்கள் நிறுவனத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு ஆதரவளிக்க விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள Uber Eats ஸ்ரீலங்காவின் பொதுமுகாமையாளர் பவ்னா ஜெயவர்தன எங்கள் விநியோகங்களிற்காக துவிச்சக்கரவண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us