அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கியுள்ள இந்தியர்களை, அமெரிக்க அதிகாரிகள் நாடு கடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கை விலங்கை பூட்டி நாடு கடத்துவதை எதிர்த்து பல இந்தியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். ஆனால் இங்கே பாருங்கள் என்ன நடக்கிறது என்று.
நேற்று முன் தினம்(11) அமெரிக்காவில் 40 இந்தியர்களை விமானத்தில் ஏற்றினார்கள். அவர்கள் கைகள் மட்டும் அல்ல, காலில் கூட நாய்ச் சங்கிலி போன்ற விலங்குகள் போடப்பட்டு இருந்தது. இதனை CNN செய்திச் சேவை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
இப்படி ஒரு சர்வதேச பெரும் குற்றவாளிகள் போல, இவர்களை நாடு கடத்தவேண்டிய அவசியம் இல்லை என்று பல மேற்கு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. ஆனால் ரம் அரசு கேட்டபாடாக இல்லை.