யாழ் சுயேட்சை MP அர்ச்சுணாவின் பதவி பறிக்கப்பட பெரும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகிறது. இதேவேளை பொலிஸ் SSP புத்திக்க மனதுங்க இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை, இன்று(13) வெளியிட்டுள்ளார்.
MP அர்ச்சுணா ஒரு நபரை தாக்கும் CCTV வீடியோவை தானும் பார்த்ததாகவும். விசாரணைகள் நடைபெறவுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேற்கொண்டு அவர் பேசுகையில், பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால், யாரையும் அடிக்க முடியும் என்ற, விசேட அதிகாரம் அர்ச்சுணா MPக்கு இல்லை என்று SSP மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அடிக்கடி பொலிசாரை குற்றம் குறை சொல்லும் அர்ச்சுணா MP, தான் சரியாக நடந்து கொண்டாரா என்று SSP மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டம் என்பது இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் சமம். அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அவரை நாம் அதி விசேடமாக நடத்த முடியாது. எந்த சலுகையும் செய்ய முடியாது. எனவே சட்ட பூர்வமான முழு நடவடிக்கையும் அர்ச்சுணா MP மீது எடுக்கப்படும் என்று புத்திய மேலும் தெரிவித்துள்ளார். இது போன்ற வழக்கில் அர்ச்சுணா குற்றவாளி என்று இனம் காணப்பட்டால், அல்லது சிறைத் தண்டனை கிடைத்தால், அவரது பாராளுமன்ற நியமனம் ரத்தாக வாய்ப்பு உள்ளது.