கொழும்பு 7ல் Wijerama உள்ள மகிந்த ராஜபக்ஷ வீட்டிற்கு செல்லும் குடி தண்ணீரை, நிறுத்தியுள்ளது இலங்கை குடி நீர் வாரியம். இந்த இணைப்பு மகிந்த வீட்டில் தங்கியுள்ள பாதுகாப்பு நபர்களுக்குச் செல்லும் குடி நீர் ஆகும். ஏற்கனவே வாடகை பாக்கி உள்ளதால், இந்த அரசாங்க வீட்டை காலி செய்யுமாறு அனுராவின் அரசு கெடு விதித்துள்ளது.
இருப்பினும் வீட்டை காலி செய்ய, அவகாசம் கோரியுள்ளார் மகிந்த. இந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பிற்கு இருக்கும் நபர்களுக்குச் செல்லும் குடி நீரை வாரியம் நிறுத்தியுள்ளதால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நபர்கள் வெளியே சென்று குளித்து விட்டு வருகிறார்கள். உரிய நேரத்தில் அவர்கள் பாதுகாப்பு கடமையில் இல்லை என்றும், நமால் தெரிவித்துள்ளார்.
குடி நீர் வாரியத்திற்கு கட்டவேண்டிய 3 லட்சம் ரூபாவை கட்டினால், அவர்கள் மீண்டும் இணைப்பைக் கொடுக்கப் போகிறார்கள். ஆனால் அதனைக் கட்டாமல், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று மீடியாவில் பேட்டி கொடுக்கிறார்கள், ராஜபக்ஷர்கள். என்ன கொடுமை ?
இந்த வீட்டின் மின்சாரம், தண்ணீர் இணைப்பு போன்றவற்றை இனியும் அரசு தான் கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் மகிந்த இருக்கிறாரா என்பது தெரியவில்லை ?