நித்தின் யாஹுவுக்கு பிடியாணை -அவர் EU-நாடுகளுக்குச் செல்ல முடியாது கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு ஏன் நடக்கவில்லை ?

நித்தின் யாஹுவுக்கு பிடியாணை -அவர் EU-நாடுகளுக்குச் செல்ல முடியாது கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு ஏன் நடக்கவில்லை ?

இஸ்ரேல் பாலஸ்தீன எல்லையான, கிழக்கு கரையில் வசித்த மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 40,000 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில். நேற்றைய தினம்(22) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ICC) இஸ்ரேல் அதிபர் நித்தின் யாஹுவுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. அவர் இனப்படுகொலை செய்கிறார் என்பது திட்டவட்டமாக நிரூபனமாகியுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றும் நேற்று தெரிவித்து இருந்ததோடு. அவரைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேல் அதிபருக்கே இந்த நிலை என்றால் ? ஏன் மகிந்த மற்றும் கோட்டபாய ஆகியோருக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் பிடியாணையை பிறப்பிக்க் முடியாது ? என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? தமிழர் தரப்பு சரியாக இதனைக் கையாளவில்லை என்பதே உண்மை நிலை ஆகும்.  இன்று முதல் இஸ்ரேல் அதிபரால், பல நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. பிரித்தானியா வந்தால் அவரை கைதுசெய்து சர்வதேச நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜாடைமாடையாக கருத்து வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மிக முக்கிய நாடக கருதப்படும் இஸ்ரேல், சக்த்திவாய்ந்த நாடு அமெரிக்காவின் மற்றும் மேற்கு உலக நாடுகளின் நண்பன். அதன் அதிபருக்கே இன்று இந்த நிலை உருவாகியுள்ளது என்றால். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த , தற்போது ஆட்சியில் கூட இல்லாத ராஜபக்சர்கள் மேல் ஏன் தமிழர்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது ?