அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியை ஈரானிற்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியாக நியமிப்பது குறித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப் ஆராய்ந்து வருகின்றார்.
டிரம்பின் மாற்றத்திற்கான திட்டம் குறித்து நன்கறிந்த இருவர் இதனை தெரிவித்துள்ளனர்.
ரிச்சர்ட் கிரெனெல் குறித்து டிரம்ப் ஆராய்கின்றார் இது உறுதி என ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரான் குறித்த மூலோபாயங்கள்குறித்தோ அந்த நாட்டிற்கான நியமனங்கள் குறித்தோ டிரம்ப் இதுவரை எந்த இறுதிமுடிவையும் எடுக்கவில்லை.
மேலும் ஈரான் தனது அணுவாயுததிட்டங்களை கைவிடச்செய்வதற்காக ஈரானிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது குறித்தோ,அல்லது இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பது குறித்தோ டிரம்ப் இதுவரை தீர்மானிக்கவில்லை.
இதேவேளை இந்த நியமனம் குறித்து சிந்திப்பதன் மூலம் டிரம்ப் தான் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என்ற செய்தியை தெரிவிக்கின்றார்.
டிரம்ப் முன்னர் ஈரானை கடுமையாக எச்சரித்துவந்துள்ளார். அவரை கொலை செய்வதற்கான முயற்சிகளின் பின்னணியில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.