Sri lanka rupee: அதள பாதாளத்தில் இலங்கை பொருளாதாரம்: பிரட் பாக்கெட் ரூ.150; வாழவே முடியாத நிலையில் மக்கள்

இந்த செய்தியை பகிருங்கள்

Sri lanka rupee::  ஒரு பிரட் பாக்கெட் ரூ.150, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்வு, டீசல் லிட்டருக்கு ரூ.75 அதிகரிப்பு என இலங்கையில் விலைவாசி உயர்வு மக்களை வாழவே முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஒரு பிரட் பாக்கெட் ரூ.150, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்வு, டீசல் லிட்டருக்கு ரூ.75 அதிகரிப்பு என இலங்கையில் விலைவாசி உயர்வு மக்களை வாழவே முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது.

இலங்கையின் பொருளாதாரமும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 260ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி சர்வதேச நிதியத்திடம் கையேந்தும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே வாஷிங்டன் சென்று சர்வதேச நிதியத்திடம் பேச்சு நடத்தி, இலங்கைக்கு உதவி கோர உள்ளார். இலங்கையின் அன்னியச் செலாணி கையிருப்பு தற்போது வெறும், 2310 கோடி டாலர்தான் இருப்பு இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், உணவுதானியங்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அரசே திண்டாடும் நிலைதான் அங்கு நிலவுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்குப்பின் இலங்கையின் பொருளாதாரம் நசிந்துபோயிருந்தது. அப்போதும் இதேபோன்று சர்வதேச கடன்பத்திரங்களை வெளியிட்டு 1255 கோடி டாலர் ஈட்டியது.

இலங்கை அரசு இப்போதுள்ள நிலையில், 400 கோடி டாலர் வெளிக்கடன் செலுத்தியாக வேண்டும், இதில் ஜூலை மாதம் 100 கோடி கூடுதலாகச் சேர்ந்துவிடும். ஏறக்குறைய 500 கோடி டாலர் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புக்குப்பின் இலங்கையின் பொருளாதாரம் அதளமபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகையின் மூலம் கிடைக்கும் வருவாய்தான் இலங்கை அரசுக்கு பிரதான வருவாய், அன்னியச் செலவாணியை அதிகம் ஈட்டித்தரும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், அரசின் பொருளாதார நிலை நாளுக்கு நாள்  மோசமடைந்தது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இலங்கை அரசு விவசாயிகள் அனைவரும் பாரம்பரிய, இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தியது. வெளிநாடுகளில் இருந்து உரம், பூச்சிகொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதைநிறுத்தியது. விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியது.

வேறுவழியின்றி எந்தவிதமான முறையான பயிற்சியும் இன்றி இயற்கை விவசாயத்துக்கு மாறிய விசாயிகளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. விளைச்சல் கைகொடுக்கவில்லை, பயிர்கள் பூச்சிதாக்குதல், நோய் தாக்குதலில் அழிந்துபோயின. ஒட்டுமொத்தமாக அரசின் புதிய விவசாயக் கொள்கையால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் அரசின் பல்வேறு நிறுவனங்கள்கூட இயங்க முடியவில்லை. 2.20 கோடி மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள். சமையல் கேஸ், மண்எண்ணெய் தட்டுப்பாட்டால் ஏராளமான பேக்கரிகள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அவ்வாறு இருந்தாலும் மிகக்கடுமையான விலைவாசி உயர்வால், ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50, டீசல் ரூ.75 விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

அனைத்து இந்திய சிலோன் பேக்கரி முதலாளிகள் கூட்டமைப்பு உணவுப் பொருட்கள் விலையையும் நேற்றுமுன்தினம் விலையை உயர்த்தியுள்ளது. இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்துஇறக்குமதியாகும் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டதால், விலையை உயர்த்தியுள்ளனர். இதனால் ஒரு பிரட்பாக்கெட் ரூ.150 முதல் ரூ.200வரை விற்கப்படுகிறது. கோதுமை கிலோவுக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லாமல் என மக்கள் நினைத்தாலும் முடியாதவகையில் விமானக் கட்டணம் 27% அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையில் உள்ள மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள பல கிராமங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர், கொந்தளித்துப்போய், பலஅமைச்சர்களின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us