மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி அறிமுகம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பநிதி அறிமுகம்!

உதயநிதியின் மகன் இன்பநிதி விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தை இயக்கப் போவது வேறு யாருமல்ல, பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தான். ‘மாமன்னன்’ படத்தின் மூலம் உதயநிதிக்கு மாரி செல்வராஜுடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. தனது மகன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அறிமுகமாக வேண்டும் என்று உதயநிதி விரும்புகிறார்.

ஆகவே, தனது மகனின் எதிர்காலத்தை மாரி செல்வராஜின் கைகளில் உதயநிதி ஒப்படைத்துள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார். அப்படியென்றால், இன்பநிதி படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்மையில், தனுஷ் படம் முடிந்த பிறகுதான் மாரி செல்வராஜ் இன்பநிதியை வைத்து படம் இயக்கவுள்ளார். அந்த இடைப்பட்ட காலத்தில் இன்பநிதி தன்னை ஒரு கதாநாயகனாக முழுமையாக தயார்படுத்திக் கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்குள் நுழைவதற்கான நுழைவுச்சீட்டு சினிமா தான் என்பது நமக்குத் தெரியாதா என்ன!