அஜித்துக்காக வன்முறையைத் துறந்தாரா லோகேஷ் கனகராஜ் ?

 அஜித்துக்காக வன்முறையைத் துறந்தாரா லோகேஷ் கனகராஜ் ?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டார். ஆனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித் படம் எப்போது என்று கேள்வி இருந்து கொண்டே இருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது! அஜித் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ராகுல் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்துதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜின் படங்களில் எப்போதும் அதிரடி, வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெறுவது வழக்கம். குறிப்பாக, ‘கூலி’ படத்தில் இந்த வன்முறை உச்சக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அஜித்துக்காக தனது இந்த பாணியை லோகேஷ் மாற்றிக்கொண்டுள்ளார்!

அஜித் படத்திற்காக லோகேஷ் எழுதியுள்ள கதையில், வன்முறை காட்சிகள் எதுவும் இல்லையாம். இது ஒரு துப்பறியும் கதையாக உருவாகியிருப்பதாகவும், மிகுந்த திரில்லிங் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போக, உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

லோகேஷ் கனகராஜ் தற்போது ‘கைதி 2’, அமீர்கானின் படம் மற்றும் ‘விக்ரம் 2’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தப் படங்களை முடித்த பின்னரே அஜித்தின் படத்தை லோகேஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.