ரஷ்யாவில் 20% விகிதத்தால் வட்டி அதிகரிப்பு: கடும் பாதிப்பில் சிக்கிய ரஷ்யா..மக்கள் ATM காசை எடுக்க ஆரம்பித்தார்கள்

இந்த செய்தியை பகிருங்கள்

ரஷ்ய அரசு பெரும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளது. உக்கிரைன் மீது போர் தொடுத்து பெரும் பணத்தை ரஷ்யா இழந்துள்ள அதேவேளை. உலக நாடுகள் பல ரஷ்யாவோடு இருந்த உறவை முறித்துள்ளது. இதுவரை 36 நாடுகள், பெரும் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. இதன் காரணத்தால் ரஷ்யாவில் உள்ள மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 20% உயர்த்தியுள்ளது. இதனை அடுத்து பெரும் வரிகளை மக்கள் தலையில் கட்டியுள்ளது ரஷ்ய அரசு. ரஷ்ய அரசு சில வேளைகளில் தமது பணத்தில் கை வைக்க கூடும் என்று, அஞ்சும் மக்கள். சேமிப்பில் போட்டு வைத்திருந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால்…

ரஷ்ய ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு முன்பாக பெரும் மக்கள் கூட்டம் உள்ளது. இது இவ்வாறு இருக்க ரஷ்ய மத்திய வங்கியோடு அனைத்து உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டுள்ளது. இதுவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us