தீக்கிரையாகும் துருக்கி! கண்ணீரில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

தீக்கிரையாகும் துருக்கி! கண்ணீரில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

துருக்கியில் பரவி வரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். துருக்கியின் பர்சா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பெரும் காட்டுத்தீ, குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வேகமாகப் பரவி வருகிறது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றனர். இருப்பினும், பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருகிறது. பர்சா மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பர்சாவை தலைநகர் அங்காராவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயில் சிக்கி ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார். இதுவரை 3,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது. துருக்கியில் ஜூன் மாத இறுதியில் இருந்து பல காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இஸ்மிர் மற்றும் பிலேசிக் ஆகிய இரண்டு மாகாணங்களை அரசு பேரிடர் பகுதிகளாக அறிவித்துள்ளது.

அசாதாரணமான அதிக வெப்பநிலை, வறண்ட நிலைமைகள் மற்றும் பலத்த காற்று ஆகியவை காட்டுத்தீ பரவலுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை 50.5 டிகிரி செல்சியஸ் (122.9 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த சில வாரங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 10 மீட்பு தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அடங்குவர்.