எலான் மஸ்க் சுனிதா வில்லியம்ஸ் குறித்து தெரிவித்துள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எலான் மஸ்க்கின் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைய உள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்கள். ஆனால், அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட அவர்கள் அங்கேயே தங்கும் நிலை உருவானது.
இந்நிலையில், மார்ச் 12 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்ததும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், எலான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்க்காணல் ஒன்றில், அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “ முந்தைய அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது. இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.” என்றும் கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த கருத்து இப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.