தங்களை அழைக்காமல், போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால், அதனை தாம் ஏற்க்கவே மாட்டோன் என்று உக்ரைன் அதிபர், பெரும் துணிச்சலோடு கூறியுள்ளார். அதனை விட, ரஷ்யாவினால் ரம் மாற்றப்பட்டுள்ளார் என்றும். தற்போது ரஷ்யா சொல்வதையே ரம் கேட்டு நடப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கி நேரடியாகத் தெரிவிக்க. இதனால் கடுப்பான ரம், உக்ரைன் அதிபரை ஒரு சர்வாதிகாரி என்று வர்ணித்து ரிவீட் செய்துள்ளார்.
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள், எது சரி என்பதனை பேசுவார், எது பிழையோ அது பிழைதான். இந்திய அரசே சொன்னாலும் பிழை பிழைதான் என்று வாதிட்டவர் பிரபாகரன். தற்போது உலக நாடுகளின் தலைவர்கள், அனைவரும் டொனால் ரம்பை எதிர்த்துப் பேசக் கூட, பயத்தில் நடுங்கும் வேளையில். உக்ரைன் அதிபர் தற்போது பேசியுள்ள விடையம், காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
இதனை அடுத்து அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகளை நிச்சயம் நிறுத்தும். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிச்சயம் ஆயுதங்களை வழங்கும். இதனால் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடனும் , அதிருப்த்தியடையும் வாய்ப்புகள் உள்ளது. எது நடந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்று, உக்ரைன் அதிபர் களம் இறங்கியுள்ளார்.
உக்ரைன் அதிபரின் இந்த பேச்சைக் கேட்டு பல உலகத் தலைவர்கள் வியப்பில் உள்ளார்கள். அமெரிக்காவை எதிர்க்க முதுகெலும்பு இல்லாத தலைவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு நபர் உள்ளார் என்பது ஆச்சரியம் தான்.