move fast for peace or lose Ukraine: உக்ரைன் என்று ஒரு நாடு இருக்காது ரஷா கைப்பற்றும்: ரம் கொடுத்த எச்சரிக்கை !

உடனடியாக தான் சொல்லும் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் இல்லையென்றால், ரஷ்யா உக்ரைனை கைப்பற்றுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டி இருக்கும் என்று, அமெரிக்க அதிபர் கூறியுள்ள விடையம், உலக நாட்டுத் தலைவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

உலகில் 200 நாடுகள் இருந்தாலும். அந்த நாடுகளில் விரல் விட்டு எண்ணும் சில நாடுகளே தமது அண்டை நாட்டோடு போர் புரிந்து அந்த நிலப்பரப்பை கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது. அந்த வகையில் ஐரோப்பாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, ரஷ்யா. இதனால் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது ஐரோப்பிய நாடுகள் உதவியது.

இதேவேளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காக, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியது. ஆனால் டொனால் ரம், ஐரோப்பாவை களற்றி விட்டது போல தற்போது உக்ரைனைனும் பெரும் சிக்கலில் மாட்டி விட்டுள்ளார். டொனால் ரம், ரஷ்யா மீதும் அவர் நண்பரான புட்டின் மீதும் , நம்பிக்கை வைத்திருக்கிறார். இது அமெரிக்க பாதுகாப்பிற்கு பெரும் பங்கம்.

ஆனால் அதனை டொனால் ரம் வெளிப்படையாக காட்டிக்கொள்வது இல்லை. இன் நிலையில் தான் ரஷ்யா சொல் கேட்டு அவர் ஆடுவதாக உக்ரைன் அதிபர் ஜிலண்ஸ்கி கூற, அதற்கு பதிலடி கொடுக்க ரம், உக்ரைன் அதிபர் ஒரு சர்வாதிகாரி என்று கருத்துச் சொல்லியுள்ளார். இதனால் தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் தோன்றியுள்ளது.