BREAKING NEWS : Main suspect in murder of ‘Ganemulla Sanjeewa’ arrested :புதுக்கடையில் சுட்டதே சிங்கள ராணுவப் புலனாய்வைச் சேர்ந்த நபர் தான்: அதிரும் தகவல் ..

புத்க்கடை கோர்ட்டில் பிரபல நிழல் உலக தாதா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சிங்கள ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் என்பவர் புத்தளம் அருகே கைது செய்யப்பட்டார், என எமது கொழும்பு புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கணேமுல்லே சஞ்சீவாவை,சிறப்புப் படையினர் நேற்று , கொழும்பில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டின் உள்ளே அவன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார், கோர்ட்டிற்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். இப்படித் தான் நடக்கும் என்று முதலிலேயே தெரிந்து வைத்திருக்கிறார் இந்த முகமது அஸ்மன்.

சஞ்சீவா, கூண்டில் இருந்தபோது, ​​மிக அருகில் வழக்கறிஞர் போல் இருந்த முகமது அஸ்மன் அவரைச் சுட்டுள்ளார். பலத்த காயமடைந்த சஞ்சீவா ஒரு பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் இறந்துவிட்டதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ருக்ஷன் பெல்லானா தெரிவித்தார்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கொலையாளியை போலீசார் புத்தளம் அருகே கைது செய்தனர்.இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவில் வேலை பார்த்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் தான் அந்த கொலையாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.முகமது அஸ்மன் ஷெர்புதீன் ஏழு கொலை வழக்குகளில் தேடப்படும் நபர்; என்ன காரணத்துக்காக நிழல் உலக தாதாவை அவர் சுட்டுக் கொன்றார் என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதன் பின்னால் பெரும் மர்மம் ஒன்று ஒளிந்துள்ளது. மேலும் சொல்லப் போனால் இவர் ஒரு வெள்ளை நிற வேனில் புத்தளம் பகுதியில் பயணிப்பதாக பொலிசாருக்கு யாரோ தகவலும் சொல்லி உள்ளார்கள். முதலில், முகமது அஸ்மனை வைத்து, சஞ்சீவவின் சோலியை முடித்து ஒரு நபர், பின்னர் அவரையும் பொலிசாரிடம் மாட்டி விட்டுள்ளார்.