Aluthkade Court incident Police seek public assistance: துபாயில் இருந்து கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்த இந்தப் பெண் யார்

துபாயில் இருந்து மாஸ்டர் பிளான் போட்டு, கொழும்பு நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்ஜீவை போட்டுத் தள்ளியது இந்தப் பெண் தான் என்று பொலிசார் உறுதிசெய்துள்ளார்கள். இலங்கை CID பிரிவினர், டுபாய் பொலிசாரோடு பேசி இவரைக் கைது செய்து இலங்கை கொண்டுவர உடனே நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செவ்வந்தி வீரசிங்ஹ என்ற இந்தப் பெண்ணுக்கு வயது 25 என்றும், இவரது அடையாள அட்டை மற்றும் இலங்கை விலாசத்தை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் செவந்தி இலங்கையில் இல்லை. அவர் டுபாயில் மறைந்து இருக்கிறார். இதனால் பொது மக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளார்கள்.

இந்தப் பெண் தொடர்பாக ஏதாவது விடையங்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு பொலிசார் உதவி கோரியுள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, இந்த நீதிமன்ற சம்பவத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்புச் செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. காரணம் சில சிங்கள அரசியல் வாதிகள், மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரகடணப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அப்படி என்றால் மூலைக்கு மூலை, ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு சோதனைச் சாவடிகள் போட்டு , அன்றாடம் சோதனை நடத்தப்படும். யாரை வேண்டும் என்றாலும் கைது செய்யலாம், என்ற நிலை தோன்றும். அதற்கு அனுரா அரசு அனுமதி மறுத்துள்ளது. நாடு பாதுகாப்பாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Name: Pinpura Devage Ishara Sewwandi
Age: 25 years
NIC Number: 995892480V
Address: 243/01, Negombo Road, Jaya Mawatha, Katuwellegama

Police have released photographs of the suspect to the media to facilitate her arrest. Anyone with information about her whereabouts is urged to contact the following numbers:

Contact Numbers:

Director, Colombo Crimes Division – 071-8591727
Police Inspector, Colombo Crimes Division – 071-8591735