2015 ஆம் ஆண்டு புங்குடுதீவில் 18 வயது பள்ளி மாணவி, வித்யாவை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து, இறுதியாக கொலை செய்து இருந்தார்கள். இது கூட்டு பாலுறவுக் கொலை என்பது, பிரேதப் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையில்.
இன்றுவரை சரியான குற்றவாளிகளை பொலிசார் கண்டு பிடிக்கவில்லை. மாறாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை பிணையில் விடுவித்து அவரை தப்ப வைத்தும் உள்ளார்கள். இதற்கு உடந்தையாக இருந்த முன் நாள் DIG லலித் ஜயசிங்கேவுக்கு வவுனியா உயர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இன்னும் வழக்கு முடிந்தபாடாக இல்லை. இது நாள் வரை குறித்த வழகை நீதிமன்றம் விசாரிக்க சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில். அனுராவின் அரசு பொறுப்பேற்ற பின்னரே வித்தியாவின் வழக்கு, முன்னேற்றம் அடைந்து வருகிறது.