கொசுவைப் பிடித்தால் பணம் – பிலிப்பைன்ஸ் அதிரடி!

டெங்குவை பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர்ப் பகுதியில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிகப்பட்டு வருகின்றனர். இதை கையாள அரசும் தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், சில பகுதிகளில் கொசுவை கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக, பிலிப்பைன்ஸின் மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ள குவேஸான் நகரில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் கடந்த வாரம் மிகவும் தீவிரமடைந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பகுதிகளுக்கும் இந்த நெருக்கடி பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தரும் தலா ஐந்து கொசுக்கள் அல்லது கொசு முட்டைகளுக்கு ஒரு பிலிப்பின்ஸ் பிசோ சன்மானமாக அளிக்கப்படும் என்று உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.