போர் நிறுத்தப்படுமா…? புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர்…!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகர்களை, ரஷ்ய படைகள் கைப்பற்றியதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகின்றன.

உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், ரஷ்யா பின்வாங்கவில்லை. போரை நிறுத்துவதற்கு இரு தரப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனளிக்காமல் போனது. இந்நிலையில் உக்ரைன் அதிபர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us