ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்கிரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார் !

இந்த செய்தியை பகிருங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தில் உக்கிரைன் ஜனாதிபதி, வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்கிரைன் மீது படை எடுத்துள்ள இந்த இக்கட்டான நிலையில், ஒரு சிறப்பு நடை முறையின் கீழ் உக்கிரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்குமாறு அவர் வேண்டு கோள் விடுத்துள்ளார். உக்கிரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் என 8 நாடுகள், கடுமையாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில். இது நடந்தால்… நேட்டோ அமைப்பின் கீழ் உக்கிரைன் வரும்… அப்படி என்றால்…

உடனடியாக உக்கிரைன் நாட்டை காப்பாற்ற நேட்டோ படைகள் செல்ல வேண்டி வரும். இது நடந்தால் நிச்சயம் 3ம் உலகப் போர் வெடிப்பது நிச்சயம். அதனை யாராலும் தடுக்கவே முடியாது. இதனால் தற்போது உடனடியாக உக்கிரைன் நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு இணைப்பது என்பது சாத்தியமா தெரியவில்லை. அப்படி ஒரு முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்தால், பெரும் பின் விளைவுகள் ஏற்படும். அணு ஆயுதத்தை பாவிக்க புட்டின் தவறப் போவது இல்லை. ரஷ்ய படைகள் கொஞ்சம் அடி வாங்கிய விவகாரத்திற்கே, அணு ஆயுதத்தை கையில் எடுக்க புட்டின் திட்டம் போட்டு வருகிறார். இன் நிலையில்….

நேட்டோ படைகளுடன் உக்கிரைன் இணைந்தால் சும்மாவா இருப்பார் புட்டின்… இந்தப் பிரச்சனை எங்கே கொண்டு போய் விடப் போகுது என்று தெரியவில்லை. நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்துச் செல்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us