சமீபத்தில் ரன்பிர் கபூர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் OTT வெளியாகி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அதிகம் வன்முறை, பெண்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதால் அனிமல் படத்தை பல பிரபலங்கள் கழிவு ஊத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனிமல் படத்தை பற்றி பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், வக்கிரத்தின் உச்சக்கட்டம்.. இந்த மாதிரியான ஆணாதிக்கம் நிறைந்த படங்களை எடுப்பதால் சமூகத்தில் சீர்கேடுகள் அதிகரிக்கும். இப்படிப்பட்ட படத்தில் ராஷ்மிகா நடித்திருக்க கூடாது.
பெண்களை சிறுமைப்படுத்தும் இப்படியான காட்சிகளில் ராஷ்மிகா நடிக்க யோசிக்கவேண்டும். அனிமல் படத்தை எடுத்த இயக்குனர் மனதில் எவ்ளோ ஆணாதிக்கம் வக்கிரம் இருந்து இருக்கும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.