தயவு செய்து வாங்கடா… பிளீஸ்.. 500,000 யூரோவை பாதியா பங்கு போடலாம் !

இப்படி யாரும் வாழ்கையில் கெஞ்சி இருக்க மாட்டார்கள் ! ஜீன் – டேவிட் என்பவர் தனது முதுகில் போடும் பையை போட்டுக்கொண்டு, நடந்து சென்றவேளை. அவரது முதுகில் உள்ள பையில் இருந்த கடன் அட்டையை ஒருவர் ஆட்டையை போட்டுள்ளார். அந்த நபர் அருகில் உள்ள கடைக்கு சென்று, சுரண்டும் லாட்டரி டிக்கெட் சிலவற்றை வாங்கி உள்ளார். 5யூரோ இல்லை 50 யூரோ விழுந்தால், உடனே பணம் கிடைத்து விடும், என்பது அவர் நோக்கம்.. ஆனால் அவர் சுரண்டிப் பார்த்த வேளை, அவருக்கு 500,000 ஆயிரம் யூரோ பரிசு விழுந்துள்ளது.

ஆனால் அதனை எப்படி எடுப்பது ? அவர் காசை பெற்றுக் கொள்ள தொடர்பு கொண்டால் அவர் எப்படி வாங்கினார் , எந்த கடன் அட்டையை பயன்படுத்தினார் என்பது எல்லாமே தெரிந்து, அந்தக் கள்வன் சிறை செல்ல வேண்டி இருக்கும் அல்லவா ? . இதனால் அந்த குறிப்பிட்ட கள்வன், பணத்தை எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஆனால் நடந்தது என்னவென்றால், அந்தக் கள்வன் லாட்டரி சீட்டை சுரண்டிய பின்னர், விடையம் புரியாமல்  கடைகாரரிடம் கொடுத்த வேளை. அவர் அதனை இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய , அவர் 500,000 (அதாவது அரை மில்லியன் யூரோ) வென்றதாகவும் உடனே நிலையத்தை தொர்பு கொள்ளவும் என்றும் காட்டியுள்ளது.

இதேவேளை லாட்டரி நிலையத்திற்கும் அலேட் சென்றுள்ளது. ஆனால் அந்த நபர் பல நாட்கள் ஆகியும் லாட்டரி பணத்தை பெற வரவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட லாட்டரி நிலையம் , எப்படி இந்த டிக்கெட்டை அவர் வாங்கினார் என்று பொலிஸ் ஊடாக ஆராய்ந்த வேளை. திருடிய கடன் அட்டையில் வாங்கிய,  விடையம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் பொலிசார், உங்கள் கடன் அட்டையை திருடி, அதில் லாட்டரி சீட்டை வாங்கிய நபருக்கு அரை மில்லியன் யூரோ விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சொல்லப் போனால், வாங்கியவர் வேறு நபராக இருந்தாலும், பணம் ஜீன் – டேவிட் உடையது என்பதால், ஜீன் டேவிட்டே பணத்தை பெற வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஜீன் டேவிட் , பகிரங்கமாக ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அடே நீ யாராக இருந்தாலும் பரவாயில்லைஅந்த லாட்டரி சீட்டை கொண்டு வா … நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன் , அந்த அரை மில்லியன் யூரோவை நாம் பங்கு போடலாம் என்று கூறியுள்ளார்.

இந்த அறிவித்தலைப் பார்த்த பிரான்ஸ் மக்கள் மட்டும் அல்ல, முழு உலகமுமே சிரிக்கிறது…. பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது உண்மை தானே ?