பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன், டிரம் சந்திப்பு சுமூகமாக இல்லை !

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மாக்ரோன் நேற்று(24) வாஷிங்டனில் டொனால்ட் டிரம்பை சந்தித்து உள்ளார். இது, டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்ததற்குப் பிறகு இருவருக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பாகும்.

இருவரின் கலந்துரையாடலும், முன்னேற்றகரமாக இருக்கவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது. மாக்ரோன், ஒரு சமூக ஊடக Q&A (கேள்வி-பதில்) நிகழ்வில், “ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் முன் மென்மையாக இருக்கக் கூடாது” என்று டிரம்புக்கு எச்சரிக்கை செய்ய இருப்பதாகக் கூறினார்.

இந்த விடையத்தையே அவர் நேற்று ரம்புடன் பேசியும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.  ரஷ்யா முழுமையாகப் போருக்குள் நுழைந்த மூன்றாவது ஆண்டின் நினைவுநாளில் நடைபெறுகிறது. இதை ஒட்டி, பல ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்று ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆர்வங்கள் ஒரே கோட்டில் உள்ளன என்பதை டிரம்புக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். ரஷ்யாவுக்கு உக்ரைனில் வெற்றி கிடைத்தால், அதைக் கட்டுப்படுத்த முடியாது” எனவும் மாக்ரோன் கூறினார்.