மனைவி மீது சந்தேகம் -மாமனார் ஓட ஓட விரட்டி கொலை

இந்த செய்தியை பகிருங்கள்

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மாமனாரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார் மருமகன் . செங்கல்பட்டு மாவட்டத்தில் பொன் விளைந்த களத்தூரில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

பொன் விளைந்த களத்தூர் பழைய காலணியைச் சேர்ந்த துலுக்காணம். இவரின் மனைவி சம்பூரணம். இத்தம்பதி தங்கள் மகள் ஜெயந்தியை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த டார்ஜன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான டார்ஜன் பணம் கேட்டு தொந்தரவு செய்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மனைவி ஜெயந்தியின் நடத்தை மீது டார்ஜனுக்கு சந்தேகம் வந்திருக்கிறது . இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தவறாக அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது . இதனால் ஜெயந்தியின் தாய், தந்தை இருவரும் டார்ஜனை கண்டித்து வந்திருக்கிறார்கள்.

சம்பவத்தன்று போதையில் இருந்த டார்ஜன் ஆத்திரமடைந்து மாமனார் துலுக்காணம் , மாமியார் சம்பூர்ணம் இருவரையும் சரமாரியாக கட்டையால் அடித்து தாக்கியிருக்கிறார்கள். ஆனால் மது போதையில் இருந்த டார்ஜன், மாமியாரை சரமாரியாக தாக்கி விட்டு மாமனாரை விரட்டிக்கொண்டு கட்டையால் தலையில் பலமாக அடித்திருக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாமனார் சம்பவ இடத்திலேயே துடி துடித்துஉயிர் இழந்திருக்கிறார்.

மருமகன் தாக்கியதில் உயிர் இழந்த மாமனார் உடலை மீட்ட அரச செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .மாமனார் இறந்ததும் தலைமறைவாக இருக்கும் டார்ஜனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us