ஐந்து பேர்.. 100 முறை.. காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி

இந்த செய்தியை பகிருங்கள்

ஐந்து நபர்களால் 100க்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த சிறுமி ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மன உளைச்சலால் ஒரு மாதத்திற்கு மேல் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். தற்பொழுது மனநலம் சரியாகி கல்லூரிக்குச் செல்லும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பதினைந்து வயது பள்ளி சிறுமி இன்ஸ்டாகிராம் மூலமாக ராகுல் என்பவனுடன் பழகி வந்திருக்கிறார். இந்த நபர் சிறுமியை காதலிப்பதாக சொல்லி வர பதிலுக்கு சிறுமியும் ராகுலை காதலித்து இருக்கிறார். இவரும் நேரில் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த 7.1 . 2015 அன்று கொல்கத்தாவில் உள்ள சயின்ஸ் சிட்டி அருகே சந்தித்திருக்கிறார்கள்.

அப்போது சிறுமியை ராகுல் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு ஒரு பேருந்தில் அமர வைத்துவிட்டு இங்கேயே இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார். அந்த சிறுமி வேறு ஒருவரிடம் பல லட்சங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு விற்பனை செய்திருக்கிறார். அந்த சிறுமியை அந்த நபர் அழைத்துச் சென்று இருக்கிறார் . அவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கமல் என்பவரிடம் விற்பனை செய்து இருக்கிறார்.

அதன் பின்னர் சித்ரா என்ற பெண்ணிடம் கமல் விற்பனை செய்திருக்கிறார் சிறுமியை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஜ்னூரில் வசித்து வந்த சித்ரா தனது 45 வயது சகோதரனுக்கு கட்டாயப்படுத்தி சிறுமியை திருமணம் செய்து வைத்திருக்கிறார். அதற்கு முன்பாகவே சித்ராவின் மகன் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இந்த நேரத்தில் அந்த சிறுமியை சித்ராவின் செல்போனில் இருந்து தனது தாயாரை தொடர்பு கொண்டு எனது இருப்பிடம் குறித்த தகவலை சொல்லி இருக்கிறார்.

இதற்கிடையில் சிறுமியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி விற்பனை செய்த ராகுலை போலீசார் பிடித்து விட்டதால் அந்த தகவல் சித்ராவிற்கு தெரிந்து, அவர் இந்த சிறுமியை அழைத்துச் செல்லும்படி கமலிடம் கூறியிருக்கிறார். உடனே கமலும் அவரது உதவியாளர் பீஸ்மும் சென்று சிறுமியை உத்தரகாண்டில் உள்ள காசிபூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்குள் சித்ராவையும் அவரது மகன் லுவையும் போலீசார் கைது விட்ட தகவல் தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட கமலும் பீஸ்முவும் சிறுமியை வெறித்தனமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். பின்னர் காசிபூர் ரயில் நிலையத்தில் கொண்டு சென்று விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.

ரயில் நிலையத்தில் இருந்து சிறுமியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேல் சிறுமி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்திருக்கிறார். மன உளைச்சலில் இருந்த அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி படிக்க தொடங்கிய அந்த சிறுமி தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் . இந்த வழக்கில் நாலு பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பேருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்டிருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us