மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்து 30 லட்சம் கேட்டும் மிரட்டிய கணவன்

இந்த செய்தியை பகிருங்கள்

மனைவி குளிக்கும் போது அதை மறைந்து நின்று வீடியோ எடுத்து தன்னுடன் உல்லாசமாக இருக்கும் போது அதையும் வீடியோ எடுத்து இதை உறவினர்களிடம் காட்டாமல் இருக்க வேண்டும் என்றால் 30 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டிய கணவனின் செயலை கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார் அந்தப் பெண். உறவினர்கள் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த பிரச்சனை தீராததால் கடைசியில் போலீசுக்கு சென்று இருக்கிறது . நண்பனின் காதலியை திருமணம் செய்து கொண்ட அந்த நபர் இப்படி செய்து வருவது தெரிய வந்திருக்கிறது.

சென்னைக்கு அருகே உள்ள நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்த பிரவீன்குமார் , அதன் பின்னர் மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பு நீ யாரையோ காதலித்தாயே என்று கேட்டிருக்கிறார். படிக்கும்போது ஒருவரிடம் பழகினேன். அதன் பின்பு தொடர்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் மனைவியின் செல்போனில் இருந்து அவரது முன்னாள் காதலரின் படம் அளிக்கப்பட்டிருந்ததை சாப்ட்வேர் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பதிவிறக்கம் செய்திருக்கிறார் பிரவீன் குமார்.

அதை மனைவியிடம் காட்டியதும் அவர் அதிர்ந்து போயிருக்கிறார் . முன்னாள் காதலரின் பழக்கம் குறித்து கேட்டு அடித்து உதைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மனைவிக்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். மனைவி குளிக்கும் போது அதை மறைந்து நின்று வீடியோ எடுத்து அந்த வீடியோவை காட்டி இருக்கிறா. ர் இது போதாது என்று தன்னுடன் மனைவி உல்லாசமாக இருக்கும் போது அதையும் வீடியோவாக எடுத்து காட்டி இருக்கிறார். இதை கண்டு பேரதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார் அந்த பெண்.

இந்த வீடியோக்களை எல்லாம் உறவினர்களிடம் காட்டாமல் இருக்க வேண்டும் என்றால் 30 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். கணவனிடம் எவ்வளவோ அந்த பெண் சொல்லிப் பார்த்தும் கேட்காததால் பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறார். பெற்றோரும் உறவினர்களும் பிரவீன் குமாரிடம் பேசி அவரை சமாதானப்படுத்த முயன்று உள்ளார்கள். ஆனால் முடியவில்லை. 30 லட்சம் வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார் .

இது குறித்து பெற்றோர்கள் பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்த போதுதான் பிரவீன்குமார் தனது நண்பரின் காதலியைத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திட்டமிட்டு தான் இதை எல்லாம் செய்ததும் தெரிய வந்தது கண்டு பெண்ணும் பெண்ணின் பெற்றோரும் பேரதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதை அடுத்து அவர்கள் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளார்கள். இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. கணவனே மனைவியின் ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டி வருவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us