பூட்டிய கதவுக்கு உள்ளே இருந்து ஜிலண்ஸ்கி கத்தியது வெளியே கேட்டது: US தூதுவரை விரட்டிய உக்ரைன்

உக்ரைன் நாட்டில் உள்ள மிகவும் அரியவகையான கனிமங்களை தாமே தோண்டி எடுப்போம் என்றும். அதற்கு ஒப்புக் கொண்டால் உக்ரைனை பாதுகாக்க முடியும் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இந்த டீல் 500 B பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த டீலில் உக்ரைன் அதிபரை கையெழுத்து போட வைக்க, டொனால் ரம் ஒரு தூதுவரை அனுப்பி இருந்தார்.

அமெரிக்க தூதுவர் உக்ரைன் அதிபர் ஜிலண்ஸ்கியை சந்தித்து, திட்டத்தை விளக்கிய நிலையில். கடும் கோபம் அடைந்த உக்ரைன் அதிபர் ஜிலண்ஸ்கி மிகக் கடுமையான குரலில் கத்தி சண்டை பிடித்துள்ளார். பூட்டிய கதவின் ஊடாக அவர் கத்திய சத்தம் கேட்டது என்று பணியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில். அமெரிக்காவின் இந்த திட்டத்தை உக்ரைன் அனுமதிக்கவில்லை.

இதனால் ரம் அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க அமெரிக்க அதிபர் நேற்றைய தினம்(24) தனது ரிவீட்டர் பக்கத்தில் ரஷ்யாவோடு ஒரு பெரும் வணிக ஒப்பந்தத்தை செய்ய உள்ளதாக தெரிவித்து, அமெரிக்க மக்களை மட்டும் அல்ல உலக மக்களையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.