Disgraced Labour MP Mike Amesbury: மது போதையில் தனது தொகுதி குடிமகனை 5 தடவை குத்திய லேபர் MP

இரவு நேரத்தில் மது போதையில் ஏற்பட்ட வாய் தர்கத்தில், ஆழும் லேபர் கட்சி MP Mike Amesbury தன்னோடு வாய் தர்கத்தில் ஈடுபட்ட நபர் முகத்தில் 5 முறை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் வாய் தர்கத்தில் ஈடுபட்ட நபர் கடுமையான காயங்களுக்கு ஆளானது மட்டுமல்லாது, அவர் தாடை எலும்பும் முறிந்துள்ளது.

இவை அனைத்தும் CCTV கமராவில் பதிவாகி இருந்ததால், முதலில் பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதனை அடுத்து பொலிசார் அவர் மீது வழக்கு தொடுத்த நிலையில். சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது MP Mike Amesbury சிறையில் உள்ளார்.

அவரது MP பதவியை பறிக்க வேண்டும் என்று மக்கள் நாளுக்கு நாள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சட்டத்தில் அதற்கு இடம் உண்டா என்று ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் அவரது MP பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எல்லாம் குடி வெறி செய்யும் வேலை…

வெள்ளி சனி ஞாயிறு என்றாலே போதும், பிரிட்டனில் உள்ள மக்களில் பலர் பப்பில் தான் தவம் இருக்கிறார்கள். பலர் குடித்து விட்டு சிரித்துக் கொண்டு வீடு சென்றாலும். சிலர் குடித்து விட்டு, தங்கள் வாழ்கையில் இழக்கக் கூடாததை எல்லாம் இழந்து வருகிறார்கள். இது ஒரு நல்ல உதாரணம்.