பட வாய்ப்புக்காக இப்படியா..? – புன்னகையரசி சினேகாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படுகிறார்.

இவருடைய உண்மையான பெயர் சுகாசினி என்பதாகும் திரைப்படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை சுகாசினி என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் சினேகா என்ற பெயரில் அறிமுகமானார் இந்த படத்தில் நடிகர் மாதவன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகைதேசம், உன்னை நினைத்து என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் நடிகை சினேகா.

கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார். திருமணத்திற்கு பிறகு சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் முழு வீச்சில் நடிக்க தயாராகியுள்ளார்.

இந்நிலையில் பட வாய்ப்புக்காக எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்க தயார் என்கிறார் அம்மணி. மேலும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயார் என்று நடிகை சினேகா தன்னுடைய ஹீரோயின் என்ற அந்தஸ்தை துணை நடிகை எனும் அளவிற்கு குறைத்துக் கொண்டுள்ளார்.

கடைசியாக இவர் நடித்த பட்டாசு திரைப்படத்தில் கூட நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் குணச்சித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரலாம் என்று நடிகை சினேகா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சினிமாவில் நான் பயணிக்க வேண்டுமே தவிர ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இருந்தது கிடையாது. ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் ஹீரோயினாகவும் நடிப்பேன்.

ஆனால் குணச்சித்திர நடிகையாகவும் தற்போது நடிக்க உள்ளேன் என்று கூறுகிறாராம் நடிகை சினேகா. சினேகாவின் இந்த முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இனி நடிகை சினேகாவை அடிக்கடி திரைப்படங்களில் பார்க்க முடியும் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us