மக்களை நசுக்குவதற்கு பதிலாக ஜனநாயகத்தை நிலை நாட்டுங்கள்!

இந்த செய்தியை பகிருங்கள்

அடக்குமுறை கொடுங்கோல் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு ஜனநாயகத்தை அனுபவிக்கும் சிறப்புரிமைகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

மிலேச்சத்தனத்தை அல்லது பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அங்கீகரிக்கவில்லை எனவும், பொது மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்சமயம் பொறுப்போடு செயல்பட வேண்டும் எனவும், அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள் மற்றும் வாள்கள் மூலம் மக்களை அடக்க முடியும் என அரசாங்கம் நம்பினால் அது வெறும் கேலிக்கூத்து என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அடக்குமுறைக்கு எதிராக முற்போக்கான எதிர்க்கட்சிகளின் சகல சக்திகளையும் ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (04) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us