லெஸ்பியன் என பேராசிரியர்கள் கிண்டல் – 2 மாணவிகள் தற்கொலை முயற்சி

இந்த செய்தியை பகிருங்கள்

லெஸ்பியன் என்று சக மாணவிகளும் பேராசிரியர்களும் கிண்டல் செய்ததால் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

சென்னையில் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணும் , வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் மருத்துவமனையில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படித்து வருகிறார்கள்.

இந்த இரண்டு மாணவிகளும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகிறார்கள். எப்போதும் இணை பிரியாமல் இருந்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இருவரும் வெளியே சென்று விட்டு விடுதிக்கு தாமதமாக வந்திருக்கிறார்கள். எப்போதும் இந்த தோழிகள் இணைபிரியாமல் இருப்பதால் மாணவிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இதனால் சக மாணவிகள் லெஸ்பியன் எனச் சொல்லி கிண்டல் செய்து வந்திருக்கிறார்கள். சக மாணவிகள் தான் இப்படி என்றால் பேராசிரியர்களும் அந்த மாணவிகளை கிண்டல் செய்து வந்திருக்கிறார்கள். இதனால் தங்களின் நடத்தையை பலரும் சந்தேகித்து வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்கள் அந்த இரு மாணவிகளும் .

இந்த நிலையில் நேற்று மதியம் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்த மெர்குரி சல்பைடு வேதிப்பொருளை இரண்டு மனைவிகளும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்கள். உணவு சாப்பிடும் போது இரண்டு மாணவிகளும் அதை உட்கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த சகல மாணவிகள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மாணவிகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு மாணவிகளுமே ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் நேரில் சென்று விடுதியில் சக மாணவிகளிடமும், விடுதி கண்காணிப்பாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us