தினமும் காலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் புழல் சிறையிலடைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

தினமும் காலையில் தண்ணீர் பிடிக்க வரும்போது எல்லாம் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் சூளைமேட்டைச் சேர்ந்த 75 வயது முதியவர் வீரப்பன். அதே பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுமி தினமும் காலையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வரும்போது உடலில் பல பாகங்களில் தொட்டு சில்மிஷம் செய்திருக்கிறார். இதனால் சிறுமி கடந்த ஒரு வாரமாக யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்திருக்கிறார்.

பின்னர் அந்த சிறுமியின் தாயார் விசாரித்த போது தான் முதியவர் கொடுத்த பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்திருக்கிறது. தாயிடம் இதை சொல்லி அந்த சிறுமி கதறி அழுத்திருக்கிறார். இதைக்கேட்டு ஆத்திரம் கொண்ட அந்த தாயார், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்னாம் தேதி அன்று புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதியவர் வீரப்பனை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தி விசாரணையில் தினமும் காலை நேரத்தில் அந்த சிறுமி தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தபோது கண்ட இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து வீரப்பனை கைது செய்து சென்னை மகிளா சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார்கள். நீதிபதியின் உத்தரவை அடித்து முதியவர் வீரப்பன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us