சேலம் அருகே மூதாட்டி கழுத்தை நெறித்துக்கொலை – உறவினர் கைது!

இந்த செய்தியை பகிருங்கள்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பணத்திற்காக மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி சின்னம்மாள் (75). கணவரை இழந்த இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வக்கீல்காடு பகுதியில் உள்ள தோட்டத்து மோட்டார் அறையில் ஒயரால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட நிலையில் மூதாட்டி சின்னம்மாள் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டு இருந்தது. தகவலின் பேரில் தாரமங்கலம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 

மேலும், கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் சின்னம்மாளின் உறவினரான சுப்பிரமணி என்பவர், அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று மோட்டார் அறையில் இறக்கிவிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சுப்பிரமணியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பணத்திற்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, சுப்பிரமணியை கைது செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us