மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- விஜய் வசந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது

இந்த செய்தியை பகிருங்கள்

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:- மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அழைப்பின் பேரில் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பாராளுமன்றத்திற்கு வெளியே அன்னை சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி கைது செய்யப்படும் செய்தியை அறிகிறோம். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக போராட்டம் நடத்திய மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஏனைய தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us