நேரில் பார்த்துவிட்டதால் காதலனுடன் சேர்ந்து கணவன் தலையில் கல்லை தூக்கிப்போட்ட மனைவி

இந்த செய்தியை பகிருங்கள்

கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்து விட்டதால் காதலனுடன் சேர்ந்து கணவன் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்திருக்கிறார் மனைவி. ஆந்திர மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது இந்த பயங்கரம்.

ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணனுக்கும், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்கள். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுனிதாவின் கணவர் தேவ பூசனுக்கு தெரிய வந்திருக்கிறது மனைவி சுனிதாவை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

அப்படி இருந்தும் தொடர்ந்து கள்ள உறவை விடாமல், காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் சுனிதா. ஒரு நாள் நாராயணனும் சுனிதாவும் உல்லாசம் அனுபவித்த போது நேரில் பார்த்து விட்டார் தேவ பூஷன். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர் இருவரையும் கடுமையாக எச்சரித்து இருக்கிறார் . தனது கணவர் நேரிலேயே பார்த்துவிட்டதால் இனி சும்மா விட மாட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக தான் இருப்பார். கள்ள உறவினை தொடர் வாய்ப்பு இருக்காது. அதற்கு என்ன செய்யலாம் என்று நாராயணனிடம் பேசி இருக்கிறார் சுனிதா. அப்போது இருவரும் சேர்த்து தேவ பூசனை தீர்த்து கட்டி விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதன்படியே தேவ பூசனை தேடி வந்த நாராயணன், நான் செய்தது தவறு. நடந்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி உங்கள் மனைவி பக்கமே நான் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி உருக்கமாக பேசியிருக்கிறார். மனம் திறந்து பேசுகிறார் என்று நினைத்து தேவபூஷனும் அவரிடம் உருக்கமாக பேசியிருக்கிறார்.

இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. அதனால மது சாப்பிடலாம்னு தோணுது. நீங்களும் வாங்க என்று அழைத்திருக்கிறார் நாராயணன் . சரி என்று தேவ பூசன் அவருடன் சென்று இருக்கிறார்.

திப்பன பள்ளி அருகே உள்ள எர்ரவாக்கம் என்கிற இடத்தில் திட்டமிட்டபடி தேவ பூசனை மது அருந்த அழைத்துச் சென்று இருக்கிறார் நாராயணன். அங்கே இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது தேவ பூசன் போதையில் இருந்த போது நாராயணன் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு இருக்கிறார்.

உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி இருக்கிறார். இதற்குள் ஒருவர் தலையில் கல்லை தூக்கிப்போட்டு சடலமாக கிடைக்கும் விவரம் போலீசாருக்கு தெரிய வந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார்?என்பது குறித்து போலீசார் சோதனைச் சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில்கொலை செய்யப்பட்டவர் தேவபூஷணம் என்பதும் , கொலையாளி நாராயணன் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து திப்பனப்பள்ளியில் பதுங்கி இருந்த நாராயணனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தேவ பூசனத்தின் மனைவி சுனிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us