நெற்றிப்பொட்டில் சுட்டும் உயிர்பிழைத்த நாய்!

இந்த செய்தியை பகிருங்கள்

அமெரிக்காவில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த “ஆர்தர்” எனப்படும் “கார்கி” வகை  நாய் ஒன்று நெற்றிப்பொட்டில் சுடப்பட்ட பின்பும் உயிர்பிழைத்துள்ளது.

‘விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பென்சில்வேனியா கூட்டமைப்பு’ என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாயின் புகைப்படங்களை வெளியிட்டு அதன் விபரங்களை பகிர்ந்துள்ளனர். அந்த அமைப்பு “ஆர்தர், உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் , இப்படிப்பட்ட காயத்துக்கு பின்னரும் உயிருடன் இருப்பது சாதாரண விஷயம் இல்லை” எனக் கூறியுள்ளனர்.

மேலும் ‘ஆர்தர்’ எவ்வாறு மீட்கப்பட்டது என்பது பற்றி கூறுகையில், ” லான்காஸ்டர் கவுண்டியின் நியூ ஹாலண்ட் எனப்படும் கிராமப்புற நகரத்தில், ஒரு வேலிக்கு அடியில் ஊர்ந்து செல்ல முயன்ற போது நெற்றியில் சுடப்பட்ட காயத்தோடு ஆர்தர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவ்வேலியின் உரிமையாளரிடம் விசாரித்த போது நெற்றியிலிருந்த அக்காயம் வேலியில் இருக்கும் கம்பி குத்தியதால் வந்திருக்கும் என்று நினைத்துள்ளனர். ஆனால் பின்னர் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அக்காயம் குண்டடிபட்டதனால் வந்தது என தெரியவந்துள்ளது.

நாயின் தலையில் காயம் பெரியதாகவும், கல் மண் கலந்த குப்பைகளால் மூடப்பட்டு இருந்துள்ளது. மேலும் முழு பரிசோதனைக்கு ஆர்தர் பெரும் வலியில் இருந்ததாகவும், வலியை குறைக்க ஆர்தருக்கு வலி நிவாரணி மற்றும் ஆண்டிபையாட்டிக்ஸ் போன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் ஆர்தருக்கு சிகிச்சை அளித்த கால்நடை ஊழியர்கள் புல்லெட்டின் துகள்கள் அவர் கொல்லப்படுவதற்கு எவ்வளவு நெருக்கமாக வந்துள்ளது என்பதை எக்ஸ்ரே மூலம் காட்டியுள்ளனர்.

https://www.instagram.com/p/CgmGJXLOll0/?utm_source=ig_embed&ig_rid=e5bb22a4-98ff-417f-bc97-814c0cd65054

மேலும் ஆர்தர் சுடப்பட்ட கோணம், புல்லெட் அவர் மூளையை தவறவிட்டு, அதிசயமாக தலையில் ஒரு துளையை மட்டும் விட்டுவிட்டு சென்றுள்ளது ஆனால் அது அவரது சுவாச பாதை மற்றும் வாயில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஆர்தரின் உடல் முழுவதும் உண்ணிகளால் மூடப்பட்டிருந்தது. மேலும் ரத்த சோகை மற்றும் நாய்களுக்கு காதுகளில் ஏற்படும் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாக இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக நாய் உயிர் பிழைத்தது. எனினும், நாயை சுட்டது யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அந்த அமைப்பில் இன் மனிதநேய சட்ட அமலாக்க குழு இந்த கொடூரமான செயலை விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், ஆர்தரின் தற்போதைய நிலையை பற்றி கூறுகையில், “ஆர்தர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது . உரிய சிகிச்சைகள் தரப்பட்டு மருத்துவமனையில் தனது நாட்களைக் கழிக்கிறது. மேலும் அவரது காயமும் அற்புதமாக குணமடைந்து வருகிறது மற்றும் ஆர்த்தரின் சுவாசம் பெரிதும் மேம்பட்டுள்ளது. ஆர்தர் முழுமையாக குணமடையும்.” என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us