“வன்முறையால் பாதிக்கப்பட்ட உக்ரேனுக்கு வழங்குகிறேன்”…. 65 கோடி ரூபாய் நிதி…. ஜப்பான் தொழிலதிபரின் அதிரடி முடிவு….!!

இந்த செய்தியை பகிருங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளை ரஷ்ய படை வீரர்கள் சூறையாடியுள்ளார்கள். இந்நிலையில் ஜப்பானின் ராகுடென் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஹிரோஷி உக்ரைனுக்கு 65 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில் உக்ரேன் மீதான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்த 65 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ரஷ்யா உக்ரேன் இந்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்கும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உக்ரைன் மக்கள் கூடிய விரைவில் மீண்டும் அமைதியான நிலைக்கு திரும்புவார்கள் என்றும் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us